மத்திய கிழக்கு

இனிமேல் நிவாரண மையங்களுக்கும் பாதுகாப்பு கிடையாது – பரபரப்பை ஏற்படுத்திய இஸ்ரேல் இராணுவம்

காஸாவின் மிகப் பெரிய நகரான காஸா சிட்டியில், எந்தப் பகுதிக்கும் தங்கள் தாக்குதலில் இருந்து பாதுகாப்பு கிடையாது என்று இஸ்ரேல் இராணுவம் எச்சரித்துள்ளது.

மருத்துவமனைகள் தவிர்த்து நிவாரண மையங்கள் உள்ளிட்ட மற்ற எந்தப் பகுதியும் ஆபத்திலேயே உள்ளதென எச்சரிக்கப்பட்டுள்ளது.

காஸா சிட்டியில் மருத்துவமனைகள் மட்டுமே பாதுகாக்கப்பட்ட இடங்களாகக் கருதப்படும். எனவே, மற்ற அனைத்து நிவாரண உள்கட்டமைப்புகளும் தாக்குதலுக்கு உள்ளாகலாம். எனவே, அங்கிருந்து அனைவரும் உடனடியாக வெளியேறவேண்டும் என இஸ்ரேல் இராணுவம் எச்சரித்துள்ளது.

ஏற்கெனவே, பொதுமக்கள் அனைவரும் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் இராணுவம், எச்சரித்துள்ளது.

தற்போது நிவாரண கட்டமைப்புகள் மீதும் தாக்குதல் நடத்தப்போவதாக எச்சரித்துள்ளது.

இதற்கிடையே, காஸா சிட்டியில் தங்கள் நடவடிக்கைகளை விரிவாக்கி, “ஹமாஸ் அமைப்பின் உள்கட்டமைப்புகளைத் தகா்த்ததாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

அந்த நகரில் வசித்துவந்த சுமாா் பத்து லட்சம் பேரில் கணிசமான எண்ணிக்கையிலானவா்கள் அங்கிருந்து வெளியேறிவிட்டனர்.

ஆனால், உடல் மற்றும் பொருளாதார பிரச்னை காரணமாக அங்கிருந்து வெளியேற முடியாதவா்களுக்கு இஸ்ரேல் இராணுவத்தின் முன்னேற்றம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

(Visited 9 times, 1 visits today)

SR

About Author

You may also like

மத்திய கிழக்கு

ஆர்மீனியாவிற்கும், அஸர்பைஜானுக்கும் இடையில் பதற்றம்!

  • April 24, 2023
ஆர்மீனியாவுக்குச் செல்லும் முக்கிய வீதியொன்றில் அஸர்பைஜான் படையினர் சோதனை நிலையமொன்றை அமைத்ததால் இரு நாடுகளுக்கும் இடையில பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளும் 1990 களிலும் 2020 ஆம்
ஆப்பிரிக்கா மத்திய கிழக்கு

சூடான் மோதல் குறித்து கோப்ரா கூட்டம் இன்று!

  • April 24, 2023
சூடானில் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக மற்றொரு கோப்ரா கூட்டம் இன்று நடைபெறும் என டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது. இன்றைய அமர்விற்கு யார் தலைமை தாங்குவார்கள் என்பது தெரியவில்லை.