ராஜஸ்தானில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் கடைகளில் வேலை செய்ய தடை
ராஜஸ்தான் அரசாங்கம், 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் பணியமர்த்துவதைத் தடை செய்யும் அவசரச் சட்டத்தை அங்கீகரித்துள்ளது.
முதலமைச்சர் பஜன் லால் சர்மாவால்(Bhajan Lal Sharma) அங்கீகரிக்கப்பட்ட இந்த நடவடிக்கை, குழந்தைகள் நலனை வலுப்படுத்துதல், சிறுவர்களுக்கான கல்வி மற்றும் சுகாதாரத்தை உறுதி செய்தல் மற்றும் மாநில தொழிலாளர் சட்டங்களை தேசிய இணக்கம் மற்றும் பாதுகாப்பு தரங்களுடன் இணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
முந்தைய ராஜஸ்தான் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் சட்டம், 12 முதல் 15 வயது வரையிலான சிறுவர்கள் தினமும் அதிகபட்சமாக 3 மணிநேரம் வேலை செய்ய அனுமதித்தது, இது இப்போது தற்போதைய நலன் மற்றும் கல்வி முன்னுரிமைகளை பிரதிபலிக்கும் வகையில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், தொழிற்சாலைகள் விதிகள், 2025ன் கீழ் பெண்கள் பாதுகாப்பிற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
புதிய விதிகளின் கீழ், பெண்கள் (கர்ப்பிணி அல்லது பாலூட்டும் பெண்கள் தவிர) நியமிக்கப்பட்ட தொழிற்சாலை தளங்களில் பணியமர்த்தப்படலாம்.
மேலும், தொழிலார்களுக்கு சுவாச முகமூடிகள், முகக் கவசங்கள், கையுறைகள், வெப்பக் கவசங்கள் மற்றும் பிற பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளிட்ட தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை (PPE) கண்டிப்பாக வழங்க வேண்டும்.





