உக்ரைனுக்கு விஜயம் செய்த இங்கிலாந்து இளவரசி ஆன்
மறைந்த ராணி எலிசபெத்தின் ஒரே மகள் பிரிட்டனின் இளவரசி ஆன் போரின் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் குடும்பங்களுடன் தனது ஒற்றுமையை வெளிப்படுத்த உக்ரைனுக்கு விஜயம் செய்துள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் தனது 75வது பிறந்தநாளைக் கொண்டாடிய ஆன், கியேவுக்கு விஜயம் செய்தபோது உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை சந்தித்துள்ளார்.
சந்திப்பின் போது உக்ரைனுக்கு பிரிட்டனின் தொடர்ச்சியான ஆதரவு மற்றும் பிற பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 2022ல் மோதல் தொடங்கியதில் இருந்து இறந்த குழந்தைகளின் ஒரு நினைவுச்சின்னத்தில் இளவரசி ஆன் மரியாதை செலுத்தினார். மேலும் அவருடன் உக்ரைனின் முதல் பெண்மணி ஒலேனா ஜெலென்ஸ்காவும் இணைந்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.





