வெனிசுலாவில் 6.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுகம் பதிவு!
வெனிசுலாவில் 6.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுகம் ஏற்பட்டுள்ளது.
தலைநகர் கராகசுக்கு மேற்கே 600 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜூலியா மாகாணத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது 7.8 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டுள்ளது.
இந்த பயங்கர நிலநடுக்கம் அருகில் அமைந்திருந்த பிற மாகாணங்களிலும் உணரப்பட்டது. இதனால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கியது.
இந்நிலையில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வெனிசுலாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் அண்டை நாடான கொலம்பியாவிலும் உணரப்பட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை.
(Visited 2 times, 1 visits today)





