போப் பிரான்சிஸின் நல்லுடல் அடக்கம் – நடைமுறையில் ஏற்பட்ட மாற்றம்
வழக்கமாகப் போப்பின் நல்லுடல் வத்திகனில் அடக்கம் செய்யப்படும் நிலையில் போப் பிரான்சிஸின் நல்லுடல் வத்திகனுக்கு வெளியே அடக்கம் செய்யப்பட்டது.
செயின்ட் மேரி மேஜர் எனும் இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. வத்திகனுக்கு வெளியே அடக்கம் செய்யப்பட்ட முதல் போப், போப் பிரான்சிஸ்.
அதுவே போப் பிரான்சிஸின் இறுதி ஆசையாக இருந்தது. எளிமையான கல்லறையை அவர் விரும்பினார்.
அதில் எந்த அலங்காரங்களும் இருக்கக்கூடாது.
அதில் “Franciscus” என்று எழுதப்பட்டிருந்தால் மட்டும் போதும் என்று அவர் தமது உயிலில் குறிப்பிட்டிருந்தார்.





