செய்தி

விஜய் மீது பொலிஸில் பரபரப்பு புகார்!! காரணம் தெரிந்தார் அதிர்ச்சியடைவீர்கள்….

நடிகர் விஜய் மீது போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொலிஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ’லியோ’.

அண்மையில் லியோ படத்தில் இருந்து ‘நா ரெடி’ என்ற பாடல் வெளியானது.

இந்த பாடல் போதைப்பொருள் பழக்கத்தை ஆதரவிக்கும் வகையிலும், ரவுடியிசனத்தை ஊக்குவிக்கும் வகையிலும் இருப்பதாக கூறி சமூக ஆர்வலர் ஆர்.டி.ஐ செல்வம் ஒன்லைன் மூலம் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.

நடிகர் விஜய் மீது போதைப்பொருள் தடுப்பு சட்ட பிரிவின்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, விஜய்யின் இந்த பாடல் மற்றும் போஸ்டர்கள் நாடளாவிய ரீதியிலும் எதிர்ப்புகளை ஏற்படுத்தியுள்ளன.

மேலும் அண்மையில் சிறுவன் ஒருவர் விஜய்க்கு சிகரட்புகைக்க வேண்டாம் என்று கூறும் காணொளிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

MP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!