ஜெர்மனியில் ஜெர்மன் மொழி தெரியாமல் வாழும் மக்கள்!
ஜெர்மனியில் வாழுகின்ற மக்களில் 15 வீதமானவர்கள் ஜெர்மன் மொழி தெரியாதவர்களாக இருக்கின்றார்கள் என்ற புள்ளி விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
ஜெர்மன் நாட்டில் வாழுகின்ற மக்களில் 15 வீதமானவர்கள் ஜெர்மனி மொழியை பேசவோ அல்லது போதுமான அளவு அறிவை கொண்டவர்களாக இல்லை என்று தெரியவந்திருக்கின்றது.
இவ்வாறு ஜெர்மனிய மொழி தெரியாதவர்கள் தங்களது அன்றாட வாழ்க்கையில் பல சிக்கலை எதிர் நோக்குகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் லண்டன் சோஸ்அல்கரிக் நீடண்சக்சர்ஸ் ஹம்பேர்க் இல் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில் ஜெர்மனி மொழி தெரியாதவர்களுக்கு சார்பான ஒரு முடிவை எடுத்துள்ளதாக தெரியவந்திருக்கின்றது.
அதாவது ஜெர்மன் மொழி தெரியாதவர்கள் வைத்தியரிடம் செல்வதற்கு தங்களுக்கு வைத்திய உதவியை அவோகா என்று சொல்லப்படுகின்ற சுகாதார காப்புறுதி நிறுவனம் வழங்க வேண்டும் என்று இவர்கள் வேண்டியுள்ளனர்.
இதற்கு சுகாதார காப்புறுதி நிறுவனம் இவர்களது விண்ணப்பத்தை நிராகரித்துள்ளது.
இதன் அடிப்படையில் இவர்கள் வழக்கு தாக்கல் செய்த பொழுது சமூக கொடுப்பனவு அமைப்பானது இவர்களுக்கு மொழி பெயர்ப்பாளருக்கு உரிய பணத்தை வழங்க வேண்டும் என்று லண்டன் சோஸ்அல்கரிக் நீடண்சக்சர்ஸ் ஹம்பேர்க் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளாதாக தெரிய வந்திருக்கின்றது.