காசா மக்களுக்கு ஆதரவாக பல நாடுகளிலும் போராட்டத்தில் இறங்கிய மக்கள்!
காசா மக்களுக்கு ஆதரவாக பல நாடுகளில் நேற்று (02.10) முதல் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
காசா பகுதிக்கு உதவிகளை ஏற்றிச் சென்ற கப்பல்களின் ஒரு குழுவை சர்வதேச கடல் பகுதியில் வைத்து இஸ்ரேலிய குழுவினர் இடைமறித்துள்ளனர்.
அங்கு வாழும் பாலஸ்தீன மக்களுக்கு தேவையான உதவிகள் கிடைப்பதை இஸ்ரேலிய அரசாங்கம் தடுத்து வருகிறது.
பிரான்ஸ், கனடா, பிரித்தானியா உள்ளிட்ட முக்கிய ஐரோப்பிய நாடுகளில் சில பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்தமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல் இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறது.
இந்நிலையில் துருக்கி, பாலஸ்தீனம், மலேசியா, தென்னாப்பிரிக்கா, கொலம்பியா, இத்தாலி, பிரிட்டன், கிரீஸ், அயர்லாந்து, பாகிஸ்தான், பெல்ஜியம், பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக போராட்டங்கள் நடந்துள்ளன.
இந்த பறிமுதல் சட்டவிரோதமானது என்று இஸ்ரேல் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





