இன்றைய முக்கிய செய்திகள் உலகம் செய்தி

பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்க வேண்டும்” – 15 நாடுகள் கூட்டறிக்கை

பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்க உலக நாடுகள் முன்வர வேண்டும் எனக் கோரிக்கையுடன், பிரான்ஸ் உட்பட 15 நாடுகள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன.

நியூயோர்க்கில் நடைபெற்ற ஐ.நா சார்ந்த வெளிநாட்டு அமைச்சர்கள் மாநாட்டில், ஸ்பெயின், நோர்வே, பின்லாந்து ஆகிய நாடுகள் உட்பட 15 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் இந்தக் கூட்டறிக்கை யை வெளியிட்டனர்.

“பாலஸ்தீனத்திற்கு அரசியல் அங்கீகாரம் வழங்குவதே நீண்டகால சமாதானத்திற்கு வழிவகுக்கும்”
என அவர்கள் வலியுறுத்தினர்.

இந்த முயற்சியில் இன்னும் பல நாடுகள் இணைய வேண்டும். பாலஸ்தீன மக்களின் நியாயமான உரிமைகளை அங்கீகரிக்க உலகம் தயாராக இருக்க வேண்டும் என பிரெஞ்சு வெளியுறவு அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில், அண்மையில் பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோனும், “பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க நேரம் வந்துவிட்டது,” என தெரிவித்திருந்தார்.

இதற்கு அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளன. இருந்தபோதிலும், பாலஸ்தீன விவகாரத்தில் பிரான்ஸ் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதுடன், தன்னுடைய நடவடிக்கைகளை வேகமாக முன்னெடுக்கவிருப்பதாகத் தெரிகிறது.

இந்தப் பன்னாட்டு ஆதரவு முயற்சி, மத்திய கிழக்கில் நிலவும் பாலஸ்தீன-இஸ்ரேல் முரண்பாட்டில் புதிய பரிமாணத்தை உருவாக்கக்கூடியதாகவும் பார்க்கப்படுகிறது.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!