சிறையில் உள்ள இம்ரான் கானை சந்திக்க மகன்களுக்கு தடை இல்லை – பாகிஸ்தான் அரசு
முன்னாள் பிரதமர் இம்ரான் கானின்(Imran Khan) மகன்கள் நாட்டிற்கு வருகை தந்தால் சிறையில் உள்ள தங்கள் தந்தையை சந்திப்பதற்கு எவ்வித தடையும் தடை இல்லை என்று பாகிஸ்தான்(Pakistan) அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், இம்ரான் கானின் மகன்கள் வந்து அவரைப் பார்க்க விரும்பினால் அவர்களுக்கு பாகிஸ்தான் விசா வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்நிலையில், “ராவல்பிண்டியில்(Rawalpindi) உள்ள அடியாலா(Adiala) சிறையில் தங்கள் தந்தை இம்ரான் கானை சந்திக்க சுலேமான் கான்(Suleman Khan) மற்றும் காசிம் கான்(Qasim Khan) மீது எந்தத் தடையும் விதிக்கப்படவில்லை” என்று உள்துறை மாநில அமைச்சர் தலால் சவுத்ரி(Talal Chaudhry) செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
சிறையில் அடைக்கப்பட்ட தங்கள் தந்தையை மீண்டும் ஒருபோதும் பார்க்க முடியாது என்று அஞ்சுவதாக சகோதரர்கள் ஸ்கை நியூஸிடம்(Sky News) கூறிய சில நாட்களுக்குப் பிறகு தலால் சவுத்ரியின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.




