இந்தியாவை வீழ்த்தி 19 வயதுக்குட்பட்ட ஆசிய கோப்பை தொடரை கைப்பற்றிய பாகிஸ்தான்
19 வயதுக்குட்பட்டோருக்கான 12வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில்(Dubai) நடைபெற்றது.
இந்த தொடரில் இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றிருந்தது.
இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில்(United Arab Emirates) நடைபெற்ற இறுதி போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இந்திய அணி பந்துவீச்சை தெரிவு செய்தது.
இதனையடுத்து முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 347 ஓட்டங்கள் குவித்தது.
பாகிஸ்தான் அணி சார்பில், அதிகபட்சமாக சமீர் மின்ஹாஸ்(Sameer Minhas) 172 ஓட்டங்களும் அஹ்மத் ஹுசைன்(Ahmed Hussain) 56 ஓட்டங்களும் பெற்றனர்.
இந்நிலையில், 348 ஓட்ட இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 26.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 156 ஓட்டங்கள் மட்டுமே பெற்றது.
இறுதியில், போட்டியின் ஆட்ட நாயகன் விருதையும் தொடரின் நாயகன் விருதையும் சமீர் மின்ஹாஸ்(Sameer Minhas) கைப்பற்றியுள்ளார்.
இதற்கு முன்னதாக செப்டம்பர் மாதம் ஆசிய கோப்பை இறுதி போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின.
இந்த தொடரில் விளையாட்டை தாண்டி இரு நாட்டு அரசியல் மேலோங்கி காணப்பட்டது. காரணம் பஹல்காம்(Pahalgam attack) பயங்கரவாத தாக்குதலுக்கு எதிரொலியாக பாகிஸ்தான் வீரர்களுடன் இந்திய வீரர்கள் கைகுலுக்க மறுத்துவிட்டனர்.
மேலும், வெற்றி கோப்பையை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவரும், அந்நாட்டு மந்திரியுமான மோசின் நக்வியிடம்(Mohsin Naqvi) இருந்து இந்திய அணி வாங்க மறுப்பு தெரிவித்து இன்று வரை கோப்பையை வாங்காமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.




