500 இற்கும் மேற்பட்ட இலங்கை சட்டத்தரணிகள் அமெரிக்க பயிற்சியில் பங்கேற்பு
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பில், அமெரிக்க நீதித்துறை நடத்திய ஒரு திட்டத்தின் மூலம் 500 க்கும் மேற்பட்ட புதிய இலங்கை சட்டத்தரணிகள், விசாரணை வழக்குகள் தொடர்பான மற்றும் குற்றவியல் சட்ட நடைமுறைகள் குறித்த பயிற்சி பெற்றுள்ளனர்.
இந்த திட்டம் நீதித்துறை வெளிநாட்டு சட்டத்தரணி மேம்பாடு, உதவி மற்றும் பயிற்சி அலுவலகம் (OPDAT) மூலம் மேற்கொள்ளப்பட்டது என்றும், புதிய சட்டத்தரணிகளுக்கான தொடர்ச்சியான சட்டக் கல்வியில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டதாக அமெரிக்க தூதரகம் கூறியுள்ளது.
தூதரகத்தின் கூற்றுப்படி, இந்த பயிற்சி அமெரிக்க-இலங்கை சட்ட ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக, நாடுகடந்த குற்றங்கள் மற்றும் குற்றவியல் வலையமைப்புகளை கையாளும் திறனை மேம்படுத்தும் நோக்கத்துடன் நடத்தப்பட்டுள்ளது.
தொடர்ச்சியான சட்டக் கல்வி சட்ட நடைமுறையின் முக்கிய பகுதியாகும் என்றும், புதிய சட்டத்தரணிகள் நீதித்துறையின் எதிர்காலம் என தூதரகம் குறிப்பிட்டுள்ளது.





