ஆஸ்கார் விருது பெற்ற நடிகை டயான் கீட்டன் 79 வயதில் காலமானார்

1977ம் ஆண்டு வெளியான அன்னி ஹால் (Annie Hal) திரைப்படத்தில் ஆஸ்கார் விருது பெற்ற அமெரிக்க நடிகை டயான் கீட்டன் (Diane Keaton) தனது 79 வயதில் காலமானார்.
லாஸ் ஏஞ்சல்ஸில் பிறந்த கீட்டன், 1970களில் தி காட்ஃபாதர் படங்களில் கே ஆடம்ஸ்-கோர்லியோன் வேடத்தில் நடித்ததன் மூலம் உலக புகழ் பெற்றார்.
பாதர் ஆப் தி பிரைட், பர்ஸ்ட் வைவ்ஸ் கிளப் மற்றும் அன்னி ஹால் உள்ளிட்ட படங்களில் நடித்ததற்காகவும் அவர் அறியப்பட்டார், இந்த வேடங்கள் அவருக்கு 1978ல் சிறந்த நடிகைக்கான அகாடமி விருதைப் பெற்று தந்தன.
கீட்டன் 1970ம் ஆண்டு காதல் நகைச்சுவைத் திரைப்படமான லவ்வர்ஸ் அண்ட் அதர் ஸ்ட்ரேஞ்சர்ஸ் மூலம் திரைப்படத்தில் அறிமுகமானார். அவரது இறுதி படம் 2024ம் ஆண்டு நகைச்சுவை சம்மர் கேம்ப் ஆகும்.
கீட்டன் ஒரு சிறந்த நடிகை மட்டுமன்றி பல படங்களையும் இயக்கியுள்ளார், 1987ம் ஆண்டு வெளியான ஹெவன் என்ற ஆவணப்படமாகும், இது மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கை பற்றிய மக்களின் நம்பிக்கைகளை விவரிக்கிறது.
ஆண்டி மெக்டோவல், ஜான் டர்டுரோ மற்றும் மைக்கேல் ரிச்சர்ட்ஸ் நடித்த அவரது 1995ம் ஆண்டு வெளியான அன்ஸ்ட்ரங் ஹீரோஸ் திரைப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டது.