ஸ்வீடனிலிருந்து கலிபோர்னியா வரை 5,000 மைல் பயணம் செய்து பணிபுரியும் செவிலியர்
ஸ்வீடனில் இருந்து சுமார் 5,300 மைல்கள் தொலைவில் உள்ள அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவுக்கு பயணம் செய்து, அங்கு மருத்துவமனையில் பணிபுரியும் பெண் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.
32 வயதான கோர்ட்னி, சான் பிரான்சிஸ்கோவில் உள்ள ஒரு மருத்துவமனையில் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவில் செவிலியராக பணியாற்றுகிறார்.
அவர் தொடர்ந்து எட்டு நாட்கள் வேலை செய்து, ஒரு மணி நேரத்திற்கு 100 டொலருக்கும் அதிகமாக சம்பாதிக்கிறார்.
அவரது வேலை திட்டம் மிகவும் தனித்துவமானது. ஒரே நேரத்தில் இரண்டு நேர வேலைகளையும் இணைத்து வேலை செய்வதன் மூலம், சில நாட்களில் அவர் தனது பணிநேரத்தை முடிக்க முடிகிறது.
பின்னர், அவர் கலிபோர்னியாவில் சுமார் 10 நாட்கள் தங்கிய பின், மீண்டும் ஸ்வீடனில் உள்ள தனது வீட்டிற்குத் திரும்புகிறார்.
10 நாட்கள் தொடர்ந்து வேலை செய்த பிறகு ஆறு வாரங்கள் முழுமையான விடுமுறை என்பது எனக்கு ஊக்கமாக இருக்கிறது, என கோர்ட்னி தெரிவித்தார்.
வாழ்க்கைச் செலவு ஸ்வீடனில் குறைவாக இருப்பதால், கலிபோர்னியாவில் கிடைக்கும் உயர் சம்பளம் மற்றும் 450 டொலர் கட்டணத்தை கொண்ட சுற்றுப்பயண விமானச் செலவுகளையும் அவரால் ஈடுசெய்ய முடிகிறது.
2021ஆம் ஆண்டு டிசம்பரில் அவரது கணவரும் மகளும் ஸ்வீடனுக்கு குடிபெயர்ந்த பிறகு, கோர்ட்னி தனது வாழ்க்கை, வேலை சமநிலையை நன்கு அனுபவிப்பதாகவும் கூறுகிறார்.
அமெரிக்காவில் தொற்றுநோய்க்குப் பிறகு, இந்த மாதிரி வேலைக்கான நீண்ட பயணங்கள் வழக்கமாகி விட்டன. பலர் நகரங்களை விட்டு வெளியே மலிவான பகுதிகளில் குடியேறியுள்ளனர்.





