நியூசிலாந்தின் பழங்குடியின மன்னர் துஹெய்தியா 69வது வயதில் காலமானார்
நியூசிலாந்தின் மவோரி மன்னர் துஹெய்தியா பூடாடௌ தே வீரோஹீரோ தனது 69 வயதில் இதய அறுவை சிகிச்சைக்குப் பிறகு காலமானார்.
அவரது மரணத்தை மவோரி கிங் இயக்கமான கிங்கிடாங்கா சமூக ஊடகங்களில் அறிவித்தது.
மன்னர் மரணிக்கும் போது அவருடன் மனைவி மக்காவ் அரிகி மற்றும் அவர்களது குழந்தைகள் இருந்ததாக அறிக்கை தெரிவிக்கிறது.
இதய அறுவை சிகிச்சைக்குப் பிறகு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் மரணமடைந்தார்.
1858 ஆம் ஆண்டில் நியூசிலாந்தின் பூர்வீக மாவோரி பழங்குடியினரை பிரிட்டிஷ் காலனித்துவத்திற்கு எதிராக ஒன்றிணைக்க நிறுவப்பட்ட கிங்கிடாங்கா இயக்கத்தின் ஏழாவது ஆட்சியாளராக மன்னர் துஹெய்டியா இருந்தார்.
இவரது ஆட்சி 18 ஆண்டுகள் நீடித்தது.அதில் அவர் மவோரி பழங்குடியினரின் ஒற்றுமைக்காக அயராது உழைத்தார்.
(Visited 2 times, 1 visits today)