நியூஸிலாந்தில் ஓர் அரிய வகை நத்தைக்கு ஜோடி தேடும் நடவடிக்கை தீவிரம்

நியூஸிலாந்தில் ஓர் அரிய வகை நத்தைக்கு ஜோடி தேடும் நடவடிக்கை தீவிரமாகியுள்ளது.
நெட் என்கிற அந்த நத்தையின் ஓடு இடது பக்கம் சுருண்டிருக்கும் நிலையில் பெரும்பாலான நத்தைகளில் அது வலது பக்கம் சுருண்டிருக்கும் என தெரியவந்துள்ளது.
40,000 நத்தைகளில் ஒன்றுக்கு மட்டுமே அந்த மரபணு குறைபாடு ஏற்படுகிறது. அதனால் நெட்டின் இனப்பெருக்க உறுப்புகளும் மாறுபட்டிருக்கும் என கூறப்படுகின்றது.
அதை தமது வீட்டுப் பூந்தோட்டத்தில் கண்டுபிடித்ததாக ஜிசல் கிளார்க்சன் கூறியுள்ளார்.
தமது வீட்டில் மீன் தொட்டி ஒன்றில் நெட்டை அவர் வைத்திருக்கிறார். நெட்டை போன்ற ஒரு ஜோடியை அதற்குத் தேடி கொடுக்க கிளார்க்சன் நியூஸிலாந்து மக்களிடம் உதவி கேட்டிருக்கிறார்.
தங்களைச் சுற்றியுள்ள இயற்கையிடம் கவனம் செலுத்துமாறு அவர் கேட்டுக்கொண்டார். ஜோடி கிடைத்தாலும் காதல் மலருமா என்பதனை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என கிளார்க்சன் குறிப்பிட்டுள்ளார்.