அமைச்சரவையில் இரண்டு இளைஞர்களுக்கு பதவி வழங்கிய நேபாளத்தின் இடைக்கால பிரதமர்
இளைஞர்கள் தலைமையிலான எழுச்சியைத் தொடர்ந்து உருவாக்கப்பட்ட நேபாளத்தின் இடைக்கால அரசாங்கம் இரண்டு இளைஞர்களுக்கு தனது அமைச்சரவையில் பதவி வழங்கியுள்ளது.
முன்னாள் சுகாதாரச் செயலாளரான சுதா கௌதம் சுகாதாரம் மற்றும் மக்கள்தொகை அமைச்சராகவும், சமூக ஆர்வலரான பப்லு குப்தா(Bablu Gupta) இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த இருவரும் நேபாளத்தில் நடைபெற்ற மிகப்பெரிய ஆட்சி கவிழ்ப்பிற்கு முக்கிய அங்கத்தவர்களாக இருந்துள்ளனர்.
இந்நிலையில், இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடந்த ஒரு விழாவில் ஜனாதிபதி ராம் சந்திர பவுடல்(Ram Chandra Paudel) முன் இருவரும் பதவியேற்று கொண்டனர்.
செப்டம்பர் 12 அன்று அப்போதைய பிரதமர் கே.பி. சர்மா ஒலியை(K.P. Sharma Oli) பதவி நீக்கம் செய்த இளைஞர் போராட்டங்களைத் தொடர்ந்து, இடைக்கால பிரதமராக நியமிக்கப்பட்ட சுஷிலா கார்க்கி (Sushila Karki) தனது அமைச்சரவையை விரிவுபடுத்துவது இது மூன்றாவது முறையாகும்.




