தலைசிறந்த வீரருக்கான பரிந்துரையில் இலங்கை வீரரின் பெயர்
இலங்கை அணியின் சகலதுறை ஆட்டக்காரர் கமிந்து மெண்டிஸ், மார்ச் மாதத்திற்கான உலகின் சிறந்த துடுப்பாட்ட வீரரை தெரிவு செய்வதற்கான பரிந்துரைகளில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சமீபத்தில் முடிவடைந்த பங்களாதேஷ் டெஸ்ட் தொடரில் துடுப்பாட்டம் மற்றும் பந்து வீச்சில் கமிந்து மெண்டிஸின் திறமையை கருத்தில் கொண்டு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அவரது பெயரை பொருத்தமான பரிந்துரைகளில் சேர்த்துள்ளது.
பங்களாதேஷுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்சிலும் கமிந்து மெண்டிஸ் சதம் அடித்தார்.
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் கமிந்து மெண்டிஸ் ஆட்டமிக்காமல் 92 ஓட்டங்களைப் பெற்றதோடு, பங்களாதேஷின் இரண்டாவது இன்னிங்சிலும் 03 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
சர்வதேச கிரிக்கட் பேரவை மார்ச் மாதம் உலகின் சிறந்த வீரரை தெரிவு செய்வதற்கான பரிந்துரைகளில் 03 வீரர்களை உள்ளடக்கியுள்ளது.
அயர்லாந்தின் மார்க் அடேர் மற்றும் நியூசிலாந்தின் மாட் ஹென்றி ஆகியோர் பரிந்துரைக்கப்பட்ட மற்ற இரண்டு வீரர்கள் ஆவர்.