டென்மார்க் வான்வெளியில் பறந்த மர்ம ட்ரோன்கள் – ஸ்தம்பித்த விமான சேவைகள்!
டென்மார்க் வான்வெளியில் அங்கீகரிக்கப்படாத ட்ரோன்கள் பறந்ததை தொடர்ந்து விமான சேவைகள் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள மூன்று சிறிய விமான நிலையங்களான எஸ்ப்ஜெர்க், சோண்டர்போர்க் மற்றும் ஸ்க்ரிட்ஸ்ட்ரப் ஆகியவையும் குறித்த ட்ரோன்கள் தொடர்பில் முறைப்பாடு அளித்துள்ளன.
இந்த வார தொடக்கத்தில் நாட்டின் கோபன்ஹேகன் விமான நிலையம் ஒரு ட்ரோன் ஊடுருவல் காரணமாக மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதை அடுத்து இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்நிலையில் அந்நாட்டின் பிரதமர் டென்மார்க் உள்கட்டமைப்பு மீதான மிகக் கடுமையான தாக்குதல்” என்று விவரித்துள்ளார்.
இந்த தாக்குதல்கள் ரஷ்ய ஈடுபாட்டை கொண்டிருக்கலாம் என அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார். இருப்பினும் ரஷ்யாவின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் குற்றச்சாட்டுகளை “ஆதாரமற்றது” என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.





