லண்டனில் 11 வயது சிறுமியை காப்பாற்றிய நாயகன் பெருமிதம்
லண்டனில் 11 வயது சிறுமியை ஒரு வருடத்திற்கு முன்பு காப்பாற்றிய பாதுகாவலர் அப்துல்லா தனோலி தன்னை ஒரு நாயகனாக நினைத்து பெருமிதம் அடைந்துள்ளார்.
லண்டனின் லெய்செஸ்டர் சதுக்கத்தில் ஒகஸ்ட் 2024 ஆம் ஆண்டில் நடந்த சம்பவத்தில், TWG கடையில் பணிபுரிந்திருந்த அப்துல்லா, வெளியில் இருந்து வன்கொடுமையான அலறல்
சத்தத்தை கேட்டுள்ளார்.
இதன்போது வெளியே சென்று பார்க்கையில் ருமேனிய நாட்டவர் ஒருவர் அந்த சிறுமியை தலையில் பலமுறை தாக்குதல் மேற்கொள்வதை
அப்துல்லா கண்டுள்ளார்.
அந்த சிறுமியை காப்பாற்ற வேண்டும் என்றும் மட்டுமே அவர் இதன்போது நினைத்துள்ளார்.
இதன்போது அவர் அமைதியாக செயற்பட்டு, சிறுமியை காப்பாற்றினார். இந்த செயலுக்குப் பிறகு, 33 வயதான குற்றவாளி உயர் பாதுகாப்பு மனநல மருத்துவமனையில் காலவரையற்ற காவலில் வைக்கப்பட்டார்.
அப்துல்லா தனது துணிச்சலுக்கான விருதுகளை பெற்று, புதிய நிர்வாகப் பதவி உயர்வு பெற்றார். அவரின் இந்த செயலால் நாட்டில் பெருமை அடைந்தார், ஆனால் அப்துல்லா இதை “சாதாரண நாள்” என்று சாதாரணமாகக் கூறுகிறார்.
இது லண்டனில் நிகழ்ந்த உண்மை சம்பவமாக, எப்போதும் எச்சரிக்கை மற்றும் துணிச்சலின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.





