ரூ.20 லட்சத்துக்கு ஆசைப்பட்டு வீட்டு கூரைகளை கழற்றிய அர்ச்சுனா எம்.பி.!
“அனர்த்தத்தால் வீட்டுகூரை சேதமடைந்திருந்தால்கூட கொடுப்பனவு வழங்கப்படும் எனக் கூறப்பட்டது. ஆனால் எனக்கு அவ்வாறு எவ்வித கொடுப்பனும் கிடைக்கப்பெறவில்லை.”
இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே அவர் நகைச்சுவை பாணியில் இவ்வாறு கூறினார்.
“ அனர்த்தத்தால் சேதமடைந்த வீட்டு கூரையொன்றுக்கு 10 லட்சம் ரூபா வழங்கப்படும் என ஆளுங்கட்சியால் அறிவிப்பு விடுக்கப்பட்டது.
இதனால் நான் எனது வீட்டில் இருந்த இரு கூரைகளை கழற்றினேன். 20 லட்சம் ரூபா கிடைக்கும் என நம்பினேன். ஆனால் 20 லட்சம் ரூபா வழங்கப்படமாட்டாதாம்.
கழற்றிய கூரைகளை மீளமைப்பதற்கு எனக்குதான் 20 ஆயிரம் ரூபா செலவு ஏற்படும். எந்த இடத்தில் கூரைத்தகடுக்கு 10 லட்சம் ரூபா வழங்கப்படுகின்றது? எனவே, போலியான அறிவிப்புகளை விடுக்க கூடாது.” எனவும் அர்ச்சுனா எம்.பி. குறிப்பிட்டார்.





