சிங்கப்பூரில் உறுதி எடுத்துக்கொண்ட 40,000க்கும் அதிகமான மக்கள்
சிங்கப்பூர் நாட்டை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு 40,000க்கும் மேற்பட்டோர் உறுதி எடுத்துக்கொண்டுள்ளனர்.
“I Pledge Total Defence” எனும் இயக்கம் மே 20ஆம் திகதி தொடங்கியது. அந்த இயக்கம் ஒகஸ்ட்டில் முடிவடைகிறது.
முழுமை பாதுகாப்பின் 40ஆண்டு நிறைவுக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இயக்கம் அமைகிறது.
80,000க்கும் மேற்பட்ட தேசியச் சேவையாளர்களும் அவர்களின் குடும்பத்தினரும் அதில் இணைந்துள்ளனர்.
அவர்கள் வெவ்வேறு சப்ரா நிலையங்களுக்குச் சென்று சிங்கப்பூரைப் பாதுகாப்பதில் தங்கள் பங்குபற்றித் தெரிந்துகொண்டனர்.
அனைவரின் அன்றாட வாழ்க்கையில் முழுமைத் தற்காப்பு இணைந்திருப்பதைத் தற்காப்புக்கான மூத்த துணையமைச்சர் ஸாக்கி முகமது சுட்டினார்.
முழுமைத் தற்காப்பில் சமூகத்தின் ஒவ்வொருவரும் பங்காற்றுவதில் புரிந்துணர்வும் ஆதரவும் இருப்பது மிக முக்கியம் என ஸாக்கி தெரிவித்தார்.
சிங்கப்பூரர்கள் தேசியத் தற்காப்பு, பாதுகாப்பு ஆகியவற்றை இளம் வயதிலிருந்தே கற்றுக்கொள்கின்றனர். சுவா சூ காங் சஃப்ரா நிலையத்தில் இன்று 360க்கும் மேற்பட்ட பாலர்பள்ளிகளைச் சேர்ந்த 30,000 பிள்ளைகள் கூடினர்.
ஜனாதிபதி தர்மன் சண்முகரத்னம், தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் ஆகியோரும் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டனர். முழுமைத் தற்காப்பை விளக்கும் விளையாட்டும் இருந்தது.