மூன்றாவது முறையாக பிரதமராகும் மோடி! டெல்லியில் 144 தடை உத்தரவு பிறப்பிப்பு
நாளை பிரதமராக நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பதவியேற்க உள்ள நிலையில் டெல்லியில் நாளையும், நாளை மறுநாளும் 144 தடை உத்தரவு பிறப்பித்து டெல்லி காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
மேலும் டெல்லியில் டிரோன்கள் மற்றும் பாரா கிளைடிங் போன்றவை பறக்கத் தடை என டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்திய ஜனநாயகத்தின் ஆட்சிப்பீடமாக விளங்குவது நாடாளுமன்றம். இந்த நாடாளுமன்றத்தின் மக்களவைக்கு
கடந்த ஏப்ரல் 19-ந் திகதி முதல் 7 கட்டங்களாக இந்திய மக்களவை தேர்தல் நடந்தது. இதில் பதிவான வாக்குகள் கடந்த 4 ஆம் திகதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
மக்களவைத் தோ்தலில் மத்தியில் ஆளும் பாஜக தனிப் பெரும்பான்மையைப் பெறாத நிலையிலும், அதிக தொகுதிகளில் வெற்றி பெற்ற (240) தனிப்பெரும் கட்சி என்ற நிலையை எட்டியுள்ளது.
தனிப் பெரும்பான்மை கிடைக்காததால், தனது தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) கட்சிகளுடன் கைகோத்து, மத்தியில் கூட்டணி ஆட்சி அமைக்கும் நிலை பாஜகவுக்கு உருவாகியுள்ளது.
தனிப்பெரும்பான்மை (272) கிடைக்காத நிலையிலும், கூட்டணிக் கட்சிகளுடன் கைகோத்து கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில், மத்தியில் கூட்டணி ஆட்சியை அமைக்கும் நிலையில் உள்ளது பாஜக