இங்கிலாந்தின் லங்காஷயரில் (Lancashire) மிதமான நிலநடுக்கம் பதிவு!
இங்கிலாந்தின் லங்காஷயரின் (Lancashire) சில்வர்டேல் (Silverdale) பகுதியில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
குறித்த நிலநடுக்கமானது 2.5 ரிக்டர் அளவில் பதிவானதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
பிளாக்பூல் (Blackpool) மற்றும் ஃப்ளூக்பர்க் (Flookburgh) உள்ளிட்ட மோர்கேம்பே (Morecambe) விரிகுடா பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அங்கு வசிப்பவர்கள் நிலநடுக்கத்தை உணர்ந்ததாகவும், வீட்டில் சில பொருட்கள் அசைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இரண்டு வாரங்களுக்கு முன்பு அதே பகுதியில் 3.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.





