ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்களால் 5 ஆண்டுகளுக்குப் பிறகு விடுவிக்கப்பட்ட மாடல் அழகி
ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள்(Yemen’s Houthi rebels), மாடல் என்டிசார் அல்-ஹம்மாடியை (Entisar al-Hammadi) கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு சிறையில் இருந்து விடுவித்துள்ளனர்.
23 வயதான என்டிசார் அல்-ஹம்மாடி, பிப்ரவரி 2021ல் ஏமன் தலைநகரான சனாவில்(Sanaa) ஒரு புகைப்பட படப்பிடிப்புக்குச் சென்றபோது கைது செய்யப்பட்டார்.
விபச்சாரம், போதைப்பொருள் துஷ்பிரயோகம் மற்றும் பாலியல் முறைகேடு ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
மேலும், கைது செய்யப்பட்டபோது, ஹம்மாடி ” உடல் ரீதியாகவும் வாய்மொழியாகவும் துஷ்பிரயோகம் செய்யப்பட்டார், இனவெறி அவமதிப்புக்கு ஆளானார் மற்றும் போதைப்பொருள் வைத்திருந்தல் மற்றும் விபச்சாரம் உள்ளிட்ட பல குற்றங்களை ஒப்புக்கொள்ள’ கட்டாயப்படுத்தப்பட்டார்” என்று வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தனது 5 வருட சிறை வாழ்க்கையில் ஹம்மாடி 2021ல் தனது உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




