உக்ரைனின் ஒடேசா துறைமுகம் மீது ஏவுகணை தாக்குதல் – 08 பேர் பலி!
தெற்கு உக்ரைனின் ஒடேசாவில் உள்ள துறைமுக உள்கட்டமைப்பு மீது ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது.
நேற்று முன்னெடுக்கப்பட்ட இந்த தாக்குதலில் குறைந்தது 08 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 27 பேர் காயமடைந்துள்ளதாக உக்ரைனின் அவசர சேவை தெரிவித்துள்ளது.
குறித்த பகுதியில் வாகனங்கள் நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் பல வாகனங்கள் தீக்கிரையாகியதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
துறைமுகம் பாலிஸ்டிக் ஏவுகணைகளால் தாக்கப்பட்டதாக ஒடேசா பிராந்தியத்தின் தலைவர் ஓலே கிப்பர் ( Oleh Kiper) கூறினார்.
இந்த தாக்குதல் தொடர்பில் ரஷ்யா இதுவரை எவ்வித தகவலும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.





