பாகிஸ்தானில் இந்து கோவில் மீது ஏவுகணை தாக்குதல்
இன்று சிந்துவின் காஷ்மோரில் உள்ள இந்து சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு சொந்தமான வழிபாட்டுத் தலத்தை “ராக்கெட் லாஞ்சர்களால்” ஒரு கொள்ளை கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்திற்குள் இந்து வழிபாட்டுத் தலத்தை சேதப்படுத்திய இரண்டாவது சம்பவம் இதுவாகும்.
காஷ்மோரில், கௌஸ்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இந்துக்களுக்கு சொந்தமான கோவில் மற்றும் அதை ஒட்டிய வீடுகள் மீது தாக்குதல் நடத்தினர்.
கோவில்கள் மற்றும் வீடுகள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர். துப்பாக்கிச் சூடு சத்தத்திற்குப் பிறகு, காஷ்மோர்-கந்த்கோட் எஸ்எஸ்பி இர்பான் சம்மோ தலைமையிலான போலீஸ் பிரிவு சம்பவ இடத்திற்குச் சென்றது.
வழிபாட்டு தலத்தின் மீது கொள்ளையர்கள் “ராக்கெட் லாஞ்சர்களை” சுட்டதாக காவல்துறை அதிகாரி கூறினார். அதிர்ஷ்டவசமாக, தாக்குதலின் போது கோவில் மூடப்பட்டிருந்தது.
பாக்ரி சமூகத்தினரால் நடத்தப்படும் மத வழிபாடுகளுக்காக ஆண்டுதோறும் கோயில் திறக்கப்படுவதாக காவல்துறை அதிகாரி மேலும் தெரிவித்தார்.