ஐரோப்பா

பிரான்ஸில் உரிமை கோரப்படாமல் கைவிடப்பட்ட மில்லியன் யூரோ பணம்

பிரான்ஸில் ஒரு மில்லியன் யூரோக்கள் வெற்றி பெற்றும் அத்தொகை உரிமை கோரப்படாமல் கைவிடப்பட்டுள்ளது.

EuroMillions விளையாட்டில் வெற்றி பெற்ற தொகையே இவ்வாறு கைவிடப்பட்டுள்ளது.

கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி Hauts-de-Seine மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர், EuroMillions அதிஷ்ட்டலாபச் சீட்டில் ஒரு மில்லியன் யூரோக்கள் தொகையை வெற்றி பெற்றிருந்தார். ஆனால் குறித்த நபர் அத்தொகையினை பெற்றுக்கொள்ள முன்வரவில்லை.

நேற்று ஏப்ரல் 29 ஆம் திகதி நள்ளிரவு வரை கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், அத்தொகையினை எவரும் உரிமை கோரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இதுபோன்ற பெரும் தொகையான பணத்தினை உரிமை கோராமல் விடுவது மிக அரிதான நிகழ்வு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 6 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்