இலங்கை செய்தி

மட்டக்களப்பு சிறை கைதிகளின் மனிதாபிமானம்!

மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறை கைதிகள் இரண்டு நாட்களுக்கான உணவில் ஒருவேளை உணவைத் தவிர்த்து அதனை நாட்டில் இடம்பெற்ற வெள்ள அனர்த்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக உலர் உணவுப் பொருட்களாக வெள்ளிக்கிழமை கையளித்துள்ளனர். இவ்வுலர் உணவுப் பொருட்கள் சிறைக் கைதிகளின் ஊடாக மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகருக்கு வழங்கப்பட்டுள்ளது. பின்னர் அவை மட்டக்களப்பு கச்சேரியில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் அருள்ராஜிடம் மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் நல்லையா பிரபாகரன் நேரில் சென்று கையளிக்கப்பட்டன. இந்த பொருட்களில், அரிசி 325kg, சோயா 100kg, சீனி 50kg, பருப்பு 50kg மற்றும் தேயிலை தூள் 6kg ஆகியவை அடங்கும். இந்நிகழ்வில் மட்டக்களப்பு சிறைச்சாலையின் பிரதான சிறைக்காவலர் ரத்நாயக்க உள்ளிட்ட ஏனைய உத்தியோதர்களும் பங்கு பற்றியிருந்தனர்.  

AJ

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!