இலங்கை ஜனாதிபதி ஊடகப்பிரிவில் பணியாற்றிய பலர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர் – சஜித்!
இலங்கை ஜனாதிபதி ஊடகப் பிரிவில் பணியாற்றிய பலர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிடுகின்றார்.
ஜனாதிபதியுடன் நாடு திரும்பிய பின்னர் அதே வீசாவைப் பயன்படுத்தி இவர்கள் நாட்டை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஜனாதிபதியின் ஊடகப் பிரிவினருக்கே நாடு செல்லும் திசையில் நம்பிக்கை இல்லை என்றால், நாட்டில் உள்ள ஏனைய மக்களின் நிலைமை என்னவாகும் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாட்டை விட்டு வெளியேறியவர்கள் பற்றிய பெயர்கள் மற்றும் கிராமங்களுடன் கூடிய தகவல்கள் இருப்பதாகவும், அது நெறிமுறைக்கு புறம்பானது என்பதாலேயே அவற்றை வெளியிடுவதில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.





