மான்செஸ்டர் ஜெப ஆலய தாக்குதல் – சந்தேகநபர் உட்பட மூவர் மரணம்
யூதப் புனித நாளான யோம் கிப்பூரின் போது, பிரித்தானியாவின் மான்செஸ்டருக்கு அருகிலுள்ள ஒரு ஜெப ஆலயத்திற்கு வெளியே ஒரு கார் பொதுமக்கள் மீது மோதியதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர்.
மேலும், சந்தேக நபர் கொல்லப்பட்டதாகவும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை உதவி ஆணையர் லாரன்ஸ் டெய்லர் தெரிவித்துள்ளார்.
தாக்குதல் நடத்தியவர் வெடிக்கும் சாதனம் போன்ற ஒரு அங்கியை அணிந்திருந்ததால் வெடிகுண்டு செயலிழக்கும் பிரிவு அழைக்கப்பட்டு சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது என்று லாரன்ஸ் டெய்லர் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த சம்பவம் குறித்து, “ஆழ்ந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்துள்ளதாக” மன்னர் மூன்றாம் சார்லஸ் தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில் யூத சமூகம் யோம் கிப்பூரைக் கடைப்பிடிப்பதால், இங்கிலாந்து முழுவதும் உள்ள ஜெப ஆலயங்களில் கூடுதல் காவல்துறை அதிகாரிகள் நிறுத்தப்படுவார்கள் என்று பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் குறிப்பிட்டுள்ளார்.





