உத்தரபிரதேசத்தில் புர்கா அணியாததால் மனைவி மற்றும் மகள்களை கொன்ற நபர்
உத்தரபிரதேசத்தில்(Uttar Pradesh) ஒரு நபர் மனைவி புர்கா(burqa) அணிய மறுத்ததால் ஏற்பட்ட தகராறில் மனைவி மற்றும் இரண்டு மகள்களைக் கொன்றதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றவாளி ஃபாரூக்(Farooq) தனது 35 வயது மனைவி தாஹிரா(Tahira), 14 வயது ஷரீன்(Shareen ) மற்றும் 6 வயது அஃப்ரீன்(Afreen) ஆகியோரை இவ்வாறு கொலை செய்துள்ளார்.
சம்பவம் குறித்து கிராமத் தலைவர் அவர்கள் காணாமல் போனதாக வழங்கிய புகாரை தொடர்ந்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சந்தேகத்திற்கிடமான சூழ்நிலைகளின் அடிப்படையில் கணவர் ஃபரூக்கை காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்நிலையில், விசாரணையின் போது அவர் கொலைகளை ஒப்புக்கொண்டார், அவர் உடல்களை தங்கள் சொந்த வீட்டில் ஒரு குழியில் புதைத்ததாக தெரிவித்துள்ளார்.
மேலும், கொலை நடந்த சம்பவ இடத்தில் அதிகாரிகள் ஒரு கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்களைக் கண்டுபிடித்தனர், அவை கொலைகளுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.





