பிரான்ஸ் ஜனாதிபதியின் இல்லத்தில் கைவரிசையை காட்டிய பணிப்பெண்!
பிரான்ஸ் ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் பணிபுரிந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் இல்லத்தில் இருந்து ஆயிரக்கணக்கான யூரோக்கள் மதிப்புள்ள வெள்ளிப் பொருட்கள் மற்றும் மேஜை சேவைப் பொருட்களைத் திருடியதற்காக அவர் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எலிசி மாளிகையின் தலைமை பணிப்பெண் இது தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளார். இதனைத் தொடர்ந்தே கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த சம்பவத்தினால் 15,000 முதல் 40,000 யூரோக்கள் (($17,500-$47,000) வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்த விசாரணைகளின் அடிப்படையில் பல ஆன்லைன் தளங்களில் திருடப்பட்ட பொருட்கள் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் பணியாளரின் வீட்டை சோதனை செய்ததில் சுமார் 100 பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.





