ஐரோப்பா

லிதுவேனியாக்குள் நுழைந்த மர்ம பலூன்களால் பரபரப்பு – விமான நிலையங்களுக்கு பூட்டு

லிதுவேனியா தனது மிகப்பெரிய இரண்டு விமான நிலையங்களையும் பெலாரஸ் எல்லையையும் மூடியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மர்மமான ஹீலியம் பலூன் ஒன்று லிதுவேனியா எல்லையை நேற்று கடந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இதனையடுத்து இரண்டு விமான நிலையங்களும் சில மணி நேரங்களுக்கு மூடப்பட்ட நிலையில், பெலாரஸ் எல்லை நாளை வரை மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லிதுவேனியா எல்லைக்குள் கடந்த வருடம் 966 ஹீலியம் பலூன்கள் நுழைந்த நிலையில், இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 500 பலூன்கள் பறந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பொருட்களை கடத்தும் கும்பல்களால் சிகரெட்டுகளை ஏற்றிய பலூன்களை இவ்வாறு பறக்க விட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில. அதனை கட்டுப்படுத்தவும் லிதுவேனியா அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அண்மைக்காலமாக ஐரோப்பிய வான்பரப்பில் ரஷ்ய ட்ரோன் ஊடுருவல்கள் மற்றும் பலூன் சம்பவங்கள் தொடர்ந்து குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

(Visited 1 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்