கண்டி ஹுன்னஸ்கிரியவில் நிலச்சரிவு; 90 குடும்பங்கள் வெளியேற்றம்
கண்டி – ஹுன்னஸ்கிரிய நகரத்திற்கு அருகில் இன்று காலை ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக ஒருவர் காயமடைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
அப்பகுதியில் நிலவி வரும் கடும் மழை காரணமாக இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதுடன், இதனால் மூன்று வீடுகள் சேதமடைந்துள்ளன. நிலச்சரிவு அபாயம் அதிகரித்துள்ள நிலையில், அப்பகுதியில் உள்ள இரண்டு பாதுகாப்பு மையங்களில் தங்கியிருந்த 90 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





