கனடாவில் ஆயுத குற்றச்சாட்டில் காலிஸ்தானி பயங்கரவாதி இந்தர்ஜித் சிங் கோசல் கைது
காலிஸ்தானி பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுனின் முக்கிய உதவியாளர் இந்தர்ஜித் சிங் கோசல் கனடாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜூன் 2023ல் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் இறந்த பிறகு, அமெரிக்காவை தளமாகக் கொண்ட காலிஸ்தானி அமைப்பான சீக்கியர்ஸ் ஃபார் ஜஸ்டிஸ் (SFJ)ன் முக்கிய கனடா அமைப்பாளராக இந்தர்ஜித் சிங் கோசல் ஆனார்.
ஒட்டாவாவில் துப்பாக்கிகள் வைத்திருந்தது தொடர்பான பல குற்றச்சாட்டுகளில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
36 வயதான அவர் ஒரு வருடத்திற்குள் கனேடிய காவல்துறையினரால் கைது செய்யப்படுவது இது இரண்டாவது முறை ஆகும்.
இதற்கு முன்னதாக கிரேட்டர் டொராண்டோ பகுதியில் (GTA) உள்ள ஒரு இந்து கோவிலில் வழிபாட்டாளர்களை தாக்கிய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டார்.





