இலங்கை செய்தி

பாடசாலை இல்ல விளையாட்டு போட்டியில் கார்த்திகைப் பூ – விசாரணைகள் ஆரம்பம்

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் இடம்பெற்ற இல்ல மெய்வல்லுனர் போட்டியின் போதான இல்ல அலங்கரிப்பு தொடர்பில் காவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

யூனியன் கல்லூரி இல்ல மெய்வல்லுனர் போட்டி நேற்றைய தினம் சனிக்கிழமை (30.03.24) நடைபெற்றது.

அதன் போது, கார்த்திகைப் பூ வடிவிலும், போர் டாங்கி வடிவிலும், இல்ல அலங்கரிப்புக்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

அவை தொடர்பிலான புகைப்படங்கள் நேற்றைய தினம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருந்தன.

அஅது தொடர்பில் நேற்றைய தினம் விளையாட்டு போட்டி நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையே காவற்துறையினர், இராணுவ புலனாய்வாளர்கள் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினர் பாடசாலைக்கு நேரில் சென்று இல்லங்களை பார்வையிட்டு, புகைப்படங்கள், காணொளிகள் என்வற்றை எடுத்தனர்.

அத்துடன் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காவல்  நிலையத்திற்கு வருகை தருமாறு பாடசாலை நிர்வாகத்திற்கு அறிவுறுத்தி இருந்தனர்.

இந்நிலையில் அதிபர் உள்ளிட்டவர்கள் காவல்  நிலையம் சென்று இருந்த நிலையில், காவற்துறையினர் அவர்களிடம் வாக்கு மூலங்களை பெற்ற பின்னர் அவர்களை விடுவித்து இருந்தனர்.

இதேவேளை அண்மையில் கிளிநொச்சி மாவடத்தில் உள்ள பாடசாலை ஒன்றில், இடம்பெற்ற விளையாட்டு போட்டியில் இல்ல அலங்கரிப்பு மற்றும் விநோத உடை போட்டிகள் தொடர்பிலான படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சைகள் ஏற்பட்டதை அடுத்து, வடமாகாண கல்வி அமைச்சு பாடசாலை அதிபர்களுக்கு , இல்ல அலங்கரிப்பு மற்றும் விநோத உடை போட்டிகள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

(Visited 13 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை