இந்து பெண்ணிடம் பேசியதற்காக கர்நாடகா மாணவர் மீது தாக்குதல்
கர்நாடகா – யாத்கிர் மாவட்டத்தில் இந்துப் பெண்ணிடம் பேசியதற்காக சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் தாக்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
கடந்த மார்ச் 18ஆம் தேதி கல்லூரியில் இருந்து வீடு திரும்பியபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
கோகி மொஹல்லா அருகே ஒன்பது பேர் கொண்ட குழு தன்னைத் தாக்கியபோது, இந்து சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்ததாக அவர் போலீசாரிடம் கூறினார்.
தன்னை ஒரு அறையில் ஐந்து மணி நேரம் அடைத்து வைத்துத் தாக்கியதாக அவர் கூறினார். கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக மாணவி கூறினார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.





