நோபல் அறக்கட்டளைக்கு எதிராக வழக்கு தொடர்ந்த ஜூலியன் அசாஞ்ச்(Julian Assange)
விக்கிலீக்ஸ்(WikiLeaks) நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச்(Julian Assange), நோபல்(Nobel) அமைதிப் பரிசை வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோவுக்கு(Maria Corina Machado) வழங்கியதற்கான அமைப்பின் முடிவை எதிர்த்து ஸ்வீடனில்(Sweden) ஒரு குற்றவியல் புகாரை தாக்கல் செய்துள்ளார்.
அசாஞ்சின் குற்றவியல் புகாரில் அமைப்பின் தலைமை உட்பட நோபல் அறக்கட்டளையுடன் தொடர்புடைய 30 நபர்கள் நிதியை துஷ்பிரயோகம் செய்ததாகவும், போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு உதவியதாகவும், ஆக்கிரமிப்பு குற்றங்களுக்கு நிதியளித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஜனநாயக உரிமைகளை ஊக்குவித்ததற்காகவும், சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்திற்கு அமைதியான மாற்றத்தை அடையப் போராடியதற்காகவும் நோபல் குழு அக்டோபரில் மச்சாடோவுக்கு பரிசை வழங்கியது குறிப்பிடத்தக்கது.





