பேஸ்புக்கில் அறிமுகமாகும் வேலைவாய்ப்பு அம்சம் – மெட்டாவின் முயற்சி
பேஸ்புக்கின் (Facebook) தாய் நிறுவனமான மெட்டா (Meta), ஒரு காலத்தில் பரபரப்பாக இருந்தாலும் பின்னர் இடைநிறுத்தப்பட்ட ஒரு அம்சத்தை மீண்டும் உயிர்ப்பிக்க முடிவெடுத்துள்ளது.
வேலைவாய்ப்புகளைத் தேடுவதற்கான அம்சத்தை மெட்டா (Meta) மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த சேவை முதன்முதலில் 2017ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. பல பயனாளர்களால் வரவேற்கப்பட்டாலும், ஐந்து ஆண்டுகளுக்குள், இதற்கான ஆதரவை மெட்டா (Meta)நிறுவனம் நிறுத்தியது.
ஆனால், தற்போதைய தொழில்துறை சூழ்நிலைகளையும், சமூக வலைத்தளங்களை தொழில்வாய்ப்புக்கான மேடைகளாக மாற்றும் போக்கையும் கருத்தில் கொண்டு, அந்த அம்சத்தை மீண்டும் கொண்டுவர மெட்டா தீர்மானித்துள்ளது.
இந்த புதிய வேலை வாய்ப்பு அம்சம், பயனாளர்கள் நேரடியாக வேலை வாய்ப்புகளை தேடி விண்ணப்பிக்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதை பேஸ்புக்கின் சந்தைப்படுத்தல் (Marketplace) பிரிவில் பார்வையிட முடியும் என மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.
மீண்டும் அறிமுகமாகும் இந்த சேவை, தனிநபர்களுக்கும் நிறுவனங்களுக்கும் இடையே வேலைவாய்ப்பு தொடர்புகளை உருவாக்க வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.





