சொத்து தகராறில் 5 குடும்ப உறுப்பினர்களைக் கொன்ற ஜார்க்கண்ட் நபருக்கு மரண தண்டனை
ஜார்க்கண்டின் செரைகேலா-கார்ஸ்வான் மாவட்டத்தில் நிலத் தகராறில் மூன்று குழந்தைகள் உட்பட ஐந்து குடும்ப உறுப்பினர்களைக் கொன்ற ஒருவருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சுன்னு மஞ்சி என்ற குற்றம் சாட்டப்பட்ட நபர் ஐபிசி பிரிவு 302ன் கீழ் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார்.
குடும்பத்திற்குச் சொந்தமான ஒரு நிலம் விற்கப்பட்டுள்ளது, குறித்த பணம் நான்கு சகோதரர்களுக்கு இடையே பகிர்ந்தளிக்கப்பட்டது. இருப்பினும், தனக்குக் குறைவான பணம் கிடைத்ததாக சுன்னு நம்பியுள்ளார்.
கோபத்தில், சுன்னு தனது சகோதரர் ரவி, அவரது மனைவி கல்பனா மற்றும் அவர்களது மூன்று குழந்தைகளைக் கொலை செய்துள்ளார்.
பின்னர் அவர் மற்றொரு சகோதரரான சித்துவின் வீட்டிற்கு சென்று தாக்குதல் நடத்திய போது சம்பவ இடத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.





