யாழ். தீவகம், சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் உணர்வெழுச்சியுடன் அஞ்சலி

யாழ்ப்பாணம் – தீவகம், சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் உணர்வெழுச்சியுடன் அஞ்சலி செலுத்திப்பட்டது.
ஆரம்பத்தின் மாவீரர்களின் பெற்றோர், மற்றும் உறவினர்கள் சாட்டி மாதா தேவாலயத்தில் இருந்து அழைத்து வரப்பட்டனர்.
தொடர்ந்து பொது ஈகைச்சுடர் முன்னாள் போராளியும், இரண்டு மாவீரர்களின் தந்தையுமான வி.கந்தசுவாமியினால் ஏற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மாவீரர்களுக்கு சுடர்கள் ஏற்றப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதன்போது மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினர்கள் முன்னாள் போராளிகள் அரசில்வாதிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்.
(Visited 2 times, 1 visits today)