மத்திய கிழக்கு நாடுகளில் தொடர்ந்து பதற்றத்தை ஏற்படுத்தி வரும் இஸ்ரேல்!
 
																																		தெற்கு லெபனானில் இஸ்ரேலிய இராணுவம் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து லெபனான் (Lebanon) ஜனாதிபதி ஜோசப் அவுன் (Joseph Aoun) அத்தகைய ஊடுருவல்களை சமாளிக்க தனது இராணுவத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
குறித்த தாக்குதல்கள் நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளன. லெபனானில் (Lebanon) உள்ள ஹெஸ்பொல்லா (Hezbollah) ஆயுதக் குழுக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் உறுதிப்படுத்தியுள்ளது.
லெபனான் போராளிக் குழுவுடன் நவம்பர் 2024 போர் நிறுத்தம் இருந்தபோதிலும், தெற்கு லெபனானில் ஐந்து பகுதிகளில் இஸ்ரேல் துருப்புக்களைப் பராமரித்து வருகிறது. மேலும் வழக்கமான வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்தி வருகிறது.
இந்நிலையில் தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ள லெபனான் பிரதமர் நவாஃப் சலாம் (Nawaf Salam) “லெபனான் அரசு நிறுவனங்கள் மற்றும் இறையாண்மைக்கு எதிரான ஒரு அப்பட்டமான ஆக்கிரமிப்பு” என்று குறிப்பிட்டுள்ளார்.
தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை தொடர்பில் தகவல்கள் வெளியாகவில்லை. ஆனால் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக லெபனானின் சுகாதார அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.
 
        



 
                         
                            
