காஸாவிலிருந்து துருப்புகளை வெளியேற்ற இணக்கம் வெளியிட்ட இஸ்ரேல்
காஸாவிலிருந்து துருப்புகளை வெளியேற்றுவதற்கான முதல் கட்டத்துக்கு இஸ்ரேல் இணக்கம் வெளியிட்டுள்ளது.
இதனை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஹமாஸ் அமைப்பும் அதற்கு இணக்கம் தெரிவித்தால் சண்டை நிறுத்தம் உடனடியாகத் தொடங்கிவிடும் என ட்ரம்ப் தனது சமூக ஊடகத்தில் பதிவிட்டார்.
இஸ்ரேல்- ஹமாஸ் சண்டை நிறுத்தத்திற்கு ட்ரம்ப் முன்வைத்த பரிந்துரைகள் சிலவற்றுக்கு ஹமாஸ் நேற்று இணக்கம் வெளியிட்டுள்ளது.
அதில் பிணையாளிகளை விடுவிப்பதும் அடங்கும்.
ஹமாஸின் முடிவை வரவேற்ற ட்ரம்ப், காஸா மீது வெடிகுண்டுத் தாக்குதல் நடத்துவதை நிறுத்தும்படி இஸ்ரேலிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
எனினும் இஸ்ரேல் தாக்குதல்களைத் தொடர்ந்தது. காஸாவில் மேலும் 57 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் வரும் வாரத்தில் பிணையாளிகளை மீட்டெடுக்க விரும்புவதாக இஸ்ரேலியப் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.





