IPL Match 66 – போட்டி ரத்து : பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ஹைதராபாத்

ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோத இருந்தன.
ஐதராபாத்தில் நடைபெற இருந்த போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இன்றைய போட்டியில் டாஸ் போடுவதற்கு முன்பே மழை குறுக்கிட்டதால், டாஸ் போடப்படாமலேயே போட்டி கைவிடப்பட்டது.
இந்த போட்டி கைவிடப்பட்டதை அடுத்து புள்ளிகள் அடிப்பைடையில் ஐதராபாத் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு மூன்றாவது அணியாக தகுதி பெற்றுள்ளது.
முன்னதாக குஜராத் அணி விளையாட இருந்த போட்டி இதே போன்று மழை காரணமாக ரத்து செய்யப்பட்டதை அடுத்து அந்த அணி நடப்பு ஐ.பி.எல். தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது குறிப்பிடத்தக்கது.
(Visited 11 times, 1 visits today)