செய்தி விளையாட்டு

IPL Match 26 – லக்னோ அணி தோல்வி

ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 26 ஆவது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.

லக்னோவில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி பேட்டிங்கை தொடங்கிய லக்னோ அணிக்கு துவக்க வீரர்களாக களமிறங்கிய குவிண்டன் டி காக் மற்றும் கேப்டன் கே.எல். குறைந்த ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தனர்.

பிறகு அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 167 ரன்களை குவித்தது.

லக்னோ அணி சார்பில் ஆயுஷ் பதோனி சிறப்பாக ஆடி 34 பந்துகளில் 55 ரன்களை குவித்தார்.

டெல்லி சார்பில் சிறப்பாக பந்துவீசிய குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும், கலீல் அகமது 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இஷாந்த் சர்மா, முகேஷ் குமார் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

எளிய இலக்கை துரத்திய டெல்லி அணிக்கு பிரித்வி ஷா நல்ல துவக்கம் கொடுத்தார். 22 பந்துகளில் 32 ரன்களை குவித்த பிரித்வி ஷா ஆட்டமிழந்தார். இவருடன் களமிறங்கிய டேவிட் வார்னர் 8 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த ஜேக் ஃபிரேசர் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். 35 பந்துகளில் 55 ரன்களை விளாசிய ஜேக் ஃபிரேசர் நவீன் உல் ஹக் பந்தில் ஆட்டமிழந்தார். இவருடன் ஆடிய கேப்டன் ரிஷப் பந்த் 24 பந்துகளில் 41 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.

18.1 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 4 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்களை குவித்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன் மூலம் 2024 ஐ.பி.எல். தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.

லக்னோ சார்பில் ரவி பிஷ்னோய் 2 விக்கெட்டுகளையும், யாஷ் தாக்கூர் மற்றும் நவீன் உல் ஹக் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

(Visited 10 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி