பாகிஸ்தானில் வழமைக்கு திரும்பிய இணைய சேவை : இருப்பினும் சில தளங்களுக்கு தடை நீடிப்பு!
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானை கைது செய்யப்பட்டு தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இருப்பினும் இந்த விவகாரம் பாகிஸ்தானில் அமைதி இன்மையை ஏற்படுத்தியது. இந்தால் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் சமூகவலைத்தளங்களான பேஸ்புக் மற்றும் ருவிட்டர் ஆகியவற்றுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது பாகிஸ்தான் முழுவதும் இணைய சேவை வழங்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் தொலைத்தொடர்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
அதே சமயம் பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூகவலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படாததால் அவற்றுக்கான தடை தொடருவதாக தொலைத்தொடர்பு ஆணையம் கூறியுள்ளது.
(Visited 1 times, 1 visits today)