இலங்கையில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு தொடர்பில் வெளியான தகவல்

இலங்கையில் 2023ஆம் ஆண்டின் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் செப்டம்பர் மாதமளவிலேயே வெளியாகும் எனப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.
பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் 10 நாட்களில் வெளியாகுமென பத்திரிகைகளில் செய்தி வெளியாகி இருந்தது.
எனினும் தாம் வழங்கிய நேர்காணல் ஒன்றில் அவ்வாறு தவறுதலாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக தெளிவுபடுத்தி அறிக்கை ஒன்றை வெளியிடவிருப்பதாகவும் கூறியுள்ளார்.
(Visited 36 times, 1 visits today)