இலங்கையில் பரீட்சைகள் தொடர்பில் வெளியான தகவல்

இலங்கையில் 2025ஆம் ஆண்டுக்குள் பரீட்சைகளை முறையாக நடத்துவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்..
பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், உயர்தரப் பரீட்சை எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி நிறைவடையவுள்ளதாகவும், விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதற்குத் தேவையான ஏற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இந்த வருடம் உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் ஆசிரியர்கள் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கு கடந்த வருடம் வழங்கப்பட்ட கொடுப்பனவுகளை வழங்குவதற்கு தன்னால் அமைச்சரவை பத்திரம் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
(Visited 19 times, 1 visits today)