மாத்தளையில் தேயிலைத் தொழிற்சாலைக்கு அருகே வடிகாணிலிருந்து சிசு மீட்பு
மாத்தளை, பிடகந்த தோட்டத்தில் உள்ள பழைய தேயிலைத் தொழிற்சாலைக்கு அருகிலுள்ள வடிகாணில் வீசப்பட்ட நிலையில் சிசு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கிடைத்த தகவலின் அடிப்படையில் கந்தேனுவர பொலிஸ் நிலைய அதிகாரிகள் சிசுவை மீட்டு மாத்தளை பொது வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சிசுவின் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் குறித்து இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை.
கந்தேனுவர பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்
(Visited 6 times, 1 visits today)





